வியாழன், 7 செப்டம்பர், 2017

உத்தரப்பிரதேச குழந்தை இறப்புகள் உண்மைக் காரணம் என்ன? இந்த கேடான மருத்துவ முறையாலா? நமக்கு விழிப்பு இல்லாததாலா?

மனித உடலையும், மனதையும் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளக் கூடியதாய் படைப்பாற்றல் உருவாக்கியுள்ளது. முழுமையுடன் இனைக்கும் இயற்கைச் சூழல் மற்றும் இறையாற்றலுடனான தொடர்பு சீரில்லாமல் போகும் போது அதை சரி செய்யவும், உணர்த்தவுமே நோய்கள் வருகின்றன.

முன்பு மக்கள் அனைவரும், நோய் எனும் என்ற நிலையிலிருந்து சுகமாய்ச் சுகம் பெறும் வழிகளை அறிந்தவர்களாக இருந்தனர்.  
தங்களால் இயலாத போது அனுபவம் உள்ள ஊர் பெரியவர்கள் உதவியை நாடுவர்.

 மருத்துவ குணமுள்ள மூலிகைகள் மற்றும் பொருட்களை சேகரித்து வைத்து பக்குவம் செய்து கொடுப்பவரை வைத்திருந்து  ஈபவர் அல்லது வைத்தியர் அல்லது பண்டுவம் பார்ப்பதால் பண்டுவர் என்பர். இவர்கள் மிக நல்லெண்ணம் கொண்வர்களாய் மதிக்க பட்டனர்.

இப்பொழுது மருத்துவம் என்பது பெரும் பணம் திரட்டும் தொழில் ஆகி விட்டது.
அயலர் மருத்துவமான அலோபதி -ஆங்கில மருத்துவம் என்ற தொழில் செய்ய பெரும் முதல் போட வேண்டி உள்ளது.

எத்தனை  கோடி பணம் போட்டால் எவ்வளவு வரும் என்ற நிலையில் உள்ளவரே, தங்களுக்குள் ஸ்பெசலிஸ்ட் என்று பேர் வைத்துக் கொண்டு, மனித உடலை கூறு போட்டு பணத்தை அறுவடை செய்கிறார்கள்.

நமது குழந்தைகள் இவர்களுக்கு தொழில் போட்டியாக வருவதை விரும்பாததே நீட் போன்ற  தேர்வுகளுக்கு காரணம்.

இது வரை, இட ஒதுக்கீடு  இருந்ததால், நம் பிள்ளைகளில் சிலர் இவர்கள் கீழ் வேலை செய்யும் கூலிகளாக வாய்ப்பிருந்தது. எளிய மக்களுக்கு ஏதோ பேருக்கு மருத்துவம் என்ற போர்வையில் வியாபாரம் நடந்தது.

எளிய வாழ்வில் இருந்துவந்த மருத்துவர்கள் மனிதநேயம் என்பதை அறிந்திருந்ததால், அலோபதி மருத்துவத்தின் கேடுகளும், மருத்துவ துறையில் நடக்கும் கொள்ளைகளும் வெளியில் வந்தன.  இவர்களின் நல்லெண்ணத்தினால் மக்களும் நன்மையடைந்தனர்.

இதை தடுக்கவே நீட். மேலும், நம் நாட்டையே அழித்து ஒழிக்கும் கேடான திட்டங்களில் இருந்து  மக்கள் கவணத்தை திருப்பவும், செத்துப் போன அலோபதி மருத்துவத் தின் மீதான மதிப்பை - நம்பிக்கையை உருவாக்கவும் இந்த நீட் எதிர்ப்பு, மோசடி அரசுகளுக்கு தேவையாக உள்ளது.

மக்களுடைய விழிப்புணர்வு தூண்டப்படக் கூடாது என்பதிலும், பிழைப்புக்காக போராடுபவர்களின் தலைமை கீழ் போராட்டங்கள் ஒடுங்கி, தாங்கள் காட்டும் பக்கமெல்லாம் மக்களின் சக்தி வீணாக வேண்டும் என்பதில்  மக்கள் விரோத அரசுகள் கவணமாக இருக்கின்றன.

இப்பொழுது இருக்கும் அரசை நடத்துபவர்களிடம் குறைந்த பட்சமான மனிதநேயமோ, விழிப்புணர்வோ இல்லை. வீண்பெருமையும், பழிவாங்கும் உணர்வும் அதற்கான அறிவும் மட்டுமே உள்ளது.

உண்மையை கூறும் பத்திரிக்கையாளர்களையும், அறிவியலாளர்களையும் கொலை செய்தும், பொய்யான வழக்குகளைப் போட்டும் மிரட்டி வருகிறார்கள் மக்கள் விரோதிகள். போலியான தலைவர்கள் வாங்கும் காசுகளுக்கு வாயாடுகிறார்கள். இவர்களை சுற்றியே ஊடகங்களின் கண்கள். நம் பார்வையை மறைக்க  புதுப்புது உத்திகளை, தொல்லைகளை கொடுப்பதற்காகவே  சட்டங்களும், இவர்கள் திட்டங்களும் உள்ளன.

உத்தரப்பிரதேச குழந்தை இறப்புகள்  உண்மைக் காரணம் என்ன? இந்த கேடான மருத்துவ முறையாலாநமக்கு விழிப்பு இல்லாததாலா?

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.
தமிழவேள் நளபதி
9345812080, 9444776208

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.