வியாழன், 16 பிப்ரவரி, 2017

இப்படி எல்லாம் நீங்கள் யோசிக்கத் தான் செய்கிறீர்களா? பதிவு செய்யுங்கள்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

91-96 ல் செய்த குற்றங்களுக்கு இப்பொழுது தண்டனை கொடுத்த நீதிக்கு வாழ்த்துக்கள்

இதே நீதி மீண்டும் இரண்டு 5 ஆண்டுகள் குற்றம் செய்ய அனுமதித்தது நீதித் துறையின் கையாலாகாத தனம். இல்லை, இவர்கள் குற்ற அனுபவத்துக்குப் பின்  அடுத்த ஆட்சி காலத்தில் நல்லவர்களாக இருப்பார்கள் என நீதி - சட்டம் நம்பிக்கை கொண்டுள்ளதா? அப்படித் தான் எனில், எதற்கு தண்டனை?

இதை சரிசெய்ய முதலில் சட்டம் வேண்டும்.

சொத்துக் குவித்தவர்கள் தங்கள் பதவியை வைத்து அதிகாரத்தை வைத்து அதற்கு உதவியவர்களுடன் கூட்டுசதி செய்து ஊழல் செய்து தான் சம்பாதித்தார்கள் என்று நீதி சொல்கிறது.


தொண்டர்கள் தலையைத் தேர்வு செய்கிறார்களா? தலைமை தனக்கு தொண்டு செய்ய கூட்டத்தை சேர்க்கிறார்களா?

அதற்கு  முதல் குற்றவாளியின் காலடியில் கிடந்த எம்.பிஎம்எல்.எ களுக்கு கொள்ளையில் பங்குஅல்லது கூட்டுச்சதியில் பங்கில்லையா


இவ்வளவு நாளும் இவர்கள் ஒழுக்கமாக மக்கள் பணி செய்து வந்தார்களாமக்கள்- தொகுதி பிரச்சனைகளை கவணத்துக்கு கொண்டுபோவதும், அரசை  வலியுறுத்தி, அதிகாரிகளை  கண்காணித்து மக்களுக்கு நன்மை செய்யத்தானே இவர்கள் மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டார்கள்

இல்லை இவர்கள் தங்கள்  பாஸ்க்கு காவடி தூக்க சட்ட சபைக்கு, பாராளுமன்றத்துக்கு அனுப்பப் பட்டார்களா?

அப்படியே இருந்தாலும் இவர்கள் கொள்ளைக்கு  உதவிய, ..எஸ், .பி எஸ் அதிகாரிகளுக்கு இந்த குற்றங்களில் பங்கில்லையா? அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களின் பணி என்ன?

 எதிர் கட்சிக் காரர்கள் ஆளுங்கட்சியை சரியாக வழி நடத்த தானே உள்ளார்கள்? இல்லை 40% கமிஷன் வாங்க மட்டும் தான் இருக்காங்களா?


இப்படி எல்லாம் நீங்கள் யோசிக்கத் தான் செய்கிறீர்களா? பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.